தமிழ்நாடு

"தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், 8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்"

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, வரும் 8ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.

தந்தி டிவி

தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 14ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, அலுவல் ஆய்வுக்குழு வரும் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்