தந்தை பெரியார் சிலைக்கு நன்றி செலுத்திய காவலர்களை இடமாறுதல் செய்துள்ளது கண்டனத்திற்குறியது என்றும் இந்த இடமாறுதல் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அனைவருக்காகவும், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இறுதி மூச்சு வரை அயராமல் பாடுபட்ட அரிய தலைவர் தந்தை பெரியார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.