தமிழ்நாடு

செல்போன் திருடிய மூவர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் எர்ணாவூர் பகுதியிலிருந்து பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர் அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவின் உதவியால் அந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன், மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்