திருவாரூர் அருகே அனுமதியின்றி புதிய ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். அலிவலம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. தற்போது 3 வது எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.