ஆள்காட்டி விரல் அடையாளத்தை வைத்து திருடன் கைது திருவாரூர் மாவட்டம் ராகவேந்திரா நகரில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை திருடப்பட்ட விவகாரத்தில், ரங்க ராட்டினம் அமைக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சுமார் 400 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரின் ஆள்காட்டி விரல் நீளமாக இருப்பதை வைத்து, அவர் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதான பிரபு என்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து சேலத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில், தான் ரங்கராட்டினம் அமைக்கும் ஊர்களில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு,நகைகளை திருடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவரிடம் இருந்த 22 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.