போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ஆரணி அருகே கீழ்வல்லத்தில் சக்திவேல் என்பவரது வீட்டில் பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டுள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.