தமிழ்நாடு

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி- 3ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 289 விநாடிகளில் 150 திருக்குறளை ஒப்பித்தார்

திருவண்ணாமலை வந்தவாசியில், 150 திருக்குறளை 289 விநாடிகளில், 3 ஆம் வகுப்பு மாணவி ஒப்புவித்து, உலக சாதனை படைத்தார்.

தந்தி டிவி

கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மாணவி தர்ஷினி, மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு திருக்​குறள் மீதான ஆர்வத்தை கண்ட ஆசிரியர்கள், அவருக்கு, திருக்குறள் ஒப்புவிக்கும் பயிற்சியை அளித்து வந்தனர். இதனால், 289 நொடிகளில், மாணவி தர்ஷிணி, 150 திருக்குறளை ஒப்பித்து உலக சாதனை படைத்தார். மாணவியின் இந்த சாதனையை பாராட்டும் வகையில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தங்க சங்கிலியை பரிசளித்தார்.மேலும் மாணவியின் பெற்றோரின், ஏழ்மை நிலை கருதி பசுமை வீடு திட்டத்தின், கீழ் வீடு கட்ட ஆணையையும் வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்