தமிழ்நாடு

திடீரென சாலை மறியலில் குதித்த மக்கள்.. தி.மலையில் பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கல்குவாரியில் வெடி வைத்ததில்... விவசாயின் ஒருவரின் தலையில் கல் விழுந்து, அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த அரிபாபு என்பவர், வந்தவாசி அடுத்த மதுரா எடப்பாளையம் பகுதியில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 2 நாட்களுக்கு முன்பு, வெடி வைத்து கற்களை உடைக்கும் பணி நடந்திருக்கிறது. அப்போது, பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆறுமுகம் என்பவரின் தலையில், கல் பறந்து வந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த ஆறுமுகம், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், விரக்தியில் இருந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் மற்றும் எடப்பாளையம் கிராம மக்கள்... மழையூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரியை மூடக்கோரியும், அதன் உரிமையாளரையும் கைது செய்யக் கோரியும் கிராம மக்கள் வலியுறுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்