திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மர்ம காய்ச்சல் பாதிப்புடன் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.