தமிழ்நாடு

பழுது பார்க்கும்போது பாய்ந்த மின்சாரம்.. ஊழியர் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

திருவண்ணாமலையில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமாட்சியம்மன் கோயில் தெருவில் மின் விநியோகத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கிக்கொண்டிருந்த முனியப்பன் என்ற ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது அவர் மின்கம்பத்திலிருந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்