தமிழ்நாடு

மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர் பலி - அனுமதியின்றி டிரெக்கிங் சென்றதாக தகவல்

திருவண்ணாமலை அருகே டிரெக்கிங் சென்ற வங்கி மேலாளர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது 12 பேர், அனுமதியின்றி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. டிரெக்கிங் அகாடமியை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவரின் தலைமையில் இவர்கள் கந்தாஸ்ரமம் வரை மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த குழுவில் இருந்த வங்கி மேலாளரான ஆனந்த் ராஜ் என்பவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரின் சடலத்தை அவர்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் மீட்டனர். மேலும் டிரெக்கிங் அகாடமியை சேர்ந்த விஜயானந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு