தமிழ்நாடு

ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு : காலைப்பிடித்து மாணவிகள் கதறல்

திருவண்ணாமலை அருகே சாலைமறியலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை அருகே சாலைமறியலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் காலைப்பிடித்து கதறி அழுத சம்பவம், நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மணி, பன்னீர்செல்வம் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற இவர்களை, நெடுங்குணம் மற்றும் பெரணம்பாக்கம் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். இந்த தகவல், மாணவர்களுக்கு தெரியவரவே, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரும், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆசிரியர்களின் காலைப்பிடித்து மாணவிகள் சிலர் கதறி அழுதது, காண்போரை கண்கலங்க வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்