தமிழ்நாடு

நண்பர்களோடு பேசும்போதே வானிலிருந்து தலையில் இறங்கிய ஒளி...அப்படியே நின்ற மூச்சு - கதறும் மனைவி

தந்தி டிவி

நண்பர்களோடு பேசும்போதே வானிலிருந்து தலையில் இறங்கிய ஒளி...அப்படியே நின்ற மூச்சு - "என் செல்லமே.. தங்கமே.."கதறும் மனைவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி கிராமம் வடவாண்டை தெருவைச் சேர்ந்த 34 வயது விவசாயி ராஜசேகரன் கிராமத்தில் உள்ள குளக்கரையிடம் நண்பர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென லேசான மழை வந்துள்ளது... மரத்தடியில் ஒதுங்கிய போது ராஜசேகரன் மீது மின்னல் தாக்கிய நிலையில் மயக்கமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்... உடனிருந்தவர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்... குழந்தைகளும் இல்லாத நிலையில் கணவரை இழந்து விட்டு தனிமரமாய் வாடுகிறார் ராஜசேகரனின் மனைவி காமாட்சி... மகனை இழந்து பரிதவிக்கிறார் தாய்.... மழை பெய்து கொண்டிருக்கும்போது திறந்தவெளியில் நின்று கொண்டு செல்போன் பேசியதால் மின்னல் தாக்கி பரிதாபமாய் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி