Tiruvannamalai | Crime | ``என்னங்க இப்படி திருடுறாங்க..'' | அசால்ட்டாக சேலைகளை திருடிய பெண்கள் #tiruvannamalai #crime #Saree #theft #tnpolice #thanthitv ஜவுளி கடையில் கைத்தறி பட்டு சேலைகளை திருடிய பெண்கள் - விசாரணை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, பட்டு சேலை கடையில் நூதன முறையில் 40-க்கும் மேற்பட்ட சேலைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவூர் கிராமத்தில் உள்ள கடைக்கு, தெலுங்கானா பதிவெண் கொண்ட காரில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் வந்துள்ளனர். பட்டு சேலை வாங்குவது போல் நடித்து, கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பிய பெண்கள், சேலைகளை திருடி தங்களது ஆடைகளுக்குள் மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். திருடிய சேலைகளை காரில் வைத்துவிட்டு மீண்டும் கடைக்குள் வந்த அவர்கள், தொடர்ந்து சேலைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 40-க்கும் மேற்பட்ட பட்டு சேலைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.