திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வீர வணக்கம் தெரிவித்து மரியாதை அளித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பெண் காவலர் ஒருவருக்கு விருது வழங்கி கவுரவித்த ஆட்சியர் மேடையில் இருந்து கீழே இறங்கி அந்த இடத்தில் அவரை நிற்க வைத்து வீர வணக்கம் செலுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.