தமிழ்நாடு

பயணியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய திருடன் - துரத்தி பிடித்த காவலருக்கு குவியும் பாராட்டு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவரிடம் செல்போனை திருடிக் கொண்டு ஓடியவரை, துரத்திப் பிடித்த காவலர் அகமது உசேனுக்கு, பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.

தந்தி டிவி

திருவண்ணாமலையை சேர்ந்த மணி நேற்று இரவு சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை ஒருவர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனை அடுத்து மணி, திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் அகமது உசேன், ரிப்பன் மாளிகை வரை துரத்தி சென்று திருடனை பிடித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தையும் புகைப்பட கலைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த காட்சியை பார்த்த மக்கள் அந்த காவலரை பாராட்டினர். இதனைத் தொடர்ந்து மணி அளித்த புகாரில் போலீஸார் நடத்திய விசாரணையில், செல்போனை திருடியவர் தர்மபுரியை சேர்ந்த மஞ்சு என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை புழல் சிறையில் அடைத்தனர். தகவலறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் காவலர் அகமது உசேனை நேரில் அழைத்து பாராட்டி பரிசு அளித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்