தமிழ்நாடு

வங்கியில் கொள்ளை முயற்சி : 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் தப்பியது...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இந்தியன் வங்கியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

* செங்கத்தை அடுத்த எறையூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், கடந்த 3 நாட்களாக விடுமுறை என்பதால் நோட்டமிட்ட மர்மநபர்கள் சிசிடிவி கேமராவின் கேபிள்களை துண்டித்தும், பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து விட்டும் உள்ளே நுழைந்துள்ளனர்.

* எனினும், நகை, பணம் இருந்த லாக்கர் உடைக்க

அவர்களால் முடியவில்லை. இந்நிலையில் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை அறிந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, விரைந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி விசாரணை மேற்கொண்டார்.

* பின்னர் வங்கி மேலாளரை அழைத்து வந்து பார்த்தபோது 7 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது தெரியவந்தது. மோப்ப நாய் உதவியுடன் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே