திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வீசிய சூறாவளி காற்றில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன. பரமனந்தல், குப்பநத்தம், கள்ளாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. ஏக்கருக்கு சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவிக்கும் விவசாயிகள், சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.