தமிழ்நாடு

ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி - ஒரே ஆசிரியருடன் இயங்குவதால் அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கனகம்மாசத்திரம் அருகே உள்ள கொத்த பனப்பாக்கம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 11 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். அவர்களுக்கு தலைமையாசிரியர் உள்ளிட்ட 2 பேர் பாடம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தலைமையாசிரியர் ஓய்வு பெற்றதால் அங்கு படித்த 10 மாணவ-மாணவிகள் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டனர். மூன்றாம் வகுப்பு படிக்கும் சாதனா என்ற மாணவி மட்டும் அதே பள்ளியில் படித்து வரும் நிலையில் ஒரே ஆசிரியர் வகுப்பு எடுத்து வருகிறார்.

ஒரு மாணவிக்காக மட்டும் அரசு பள்ளி செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் புதிய தலைமையாசிரியை நியமித்து கூடுதல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்