தமிழ்நாடு

"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர். பகலிரவு பாராமல் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் கோடை காலத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 1500 ஏக்கரில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளனர். விரைவில் சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்தாலும் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்