திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள தனியார் பெயிண்ட் மூலப்பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிவூட்டும் தன்மை கொண்ட பெயிண்ட் மூலப்பொருட்கள் இருப்பதால், தீ கொழுந்துவிட்டு கரும்புகையுடன் எரிந்து வருகிறது. தகவலறிந்து வந்து செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.