தமிழ்நாடு

லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி : லாரியை முந்த முயன்ற போது விபரீதம்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிறுவன், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

செங்குன்றம் அடுத்த நல்லூரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெயசீலன், தனது சகோதரியுடன் வடகரை எம்ஜிஆர் சிலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தான். அப்போது முன்னே சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியை முந்த முயற்சித்த போது, நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் சகோதரி சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள விபத்து குறித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது

BREAKING || TN Election2026 | உச்சகட்ட பரபரப்பில் விஜய் திடீர் கடிதம்

ECI | PM Modi | Kharge | பிரதமர் குறித்து கமெண்ட் கார்கேவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்