தமிழ்நாடு

Tiruvallur | இன்ஸ்டா காதல் மனைவி குறித்து தரக்குறைவாக பேசிய நண்பன் - வெட்டி கூறுபோட்ட இளைஞர்

Tiruvallur | இன்ஸ்டா காதல் மனைவி குறித்து தரக்குறைவாக பேசிய நண்பன் - வெட்டி கூறுபோட்ட இளைஞர்

thanthitv

Tiruvallur | இன்ஸ்டா காதல் மனைவி குறித்து தரக்குறைவாக பேசிய நண்பன் - வெட்டி கூறுபோட்ட இளைஞர்.. குலை நடுங்கவிட்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாணாபுத்தூரில், வயல்வெளியில் உள்ள சமாதியில் 18 வயது இளைஞர் ரஞ்சன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பாதிரிவேடு போலீசார், ரஞ்சனின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரஞ்சனும் அவரது நண்பரான காமேஷ் என்பவரும் கடந்த 12ம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மது அருந்தச் சென்றுள்ளனர். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட காமேஷின் மனைவியை, நண்பரான ரஞ்சன் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காமேஷ், ரஞ்சன் தன்னிடம் ஏற்கனவே கொடுத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டே அவரைச் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்தது அம்பலமானது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த காமேஷை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு