பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக்கோரி, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் முன்பு சென்னையை சேர்ந்த சமுக ஆர்வலர் நர்மதா, மணியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, ஆந்திர அரசை போல கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், திருமுல்லைவாயல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.