திருப்பூரில் , சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்ட 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கலையரங்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், மூச்சு நின்றால் மட்டும் மரணம் அல்ல, முயற்சி நின்றாலும் மரணம் தான் என்றார். ஆகையால் முயற்சி செய்வதை விட்டு விடாதீர்கள் என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.