தமிழ்நாடு

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் - மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி படும் அதிசயம்

காங்கேயம் அருகே பழமையான கோயிலில் மூலவர் சிலை மீது சூரிய வெளிச்சமும், நிலா வெளிச்சமும் விழுவதால் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது சின்னாரிபட்டி. இங்கு 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படும் "கம்பம்" மாதேசிலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சிதிலமைடைந்த நிலையில் இருந்து சீர்செய்யப்பட்டு 2016ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

அஸ்திவாரமே இல்லாமல் ஒரு பாறையின் மீது அடுக்கடுக்காக கல் வைத்து இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது என தொல்லியல் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

இந்த கோயிலில் முருகர், விநாயகர், ஈஸ்வரர், அம்பாள் ஆகிய சிலைகள் மீது, ஆண்டுக்கு 41 நாட்கள் சூரிய வெளிச்சமும், 21 நாட்கள் நிலா வெளிச்சமும் விழுவதாக கூறப்படுகிறது.

கோயிலுக்கு எதிரே, ஒரே கல்லினால் ஆன 33 அடி உயர கம்பம் உள்ளதுடன், அதில் ஏற்றப்படும் தீப ஒளி மூலவர்கள் சிலைகள் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூலவர் சிலைகள் மீது சூரிய ஒளி விழுவதால் கதவுகளும் முழுமையாக மூடப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த கோயிலைப் பற்றிய சிறப்புகள் தற்போதுதான் பரவத் தொடங்கியுள்ளதால் மக்கள் ஆர்வமாக வரத் தொடங்கியுள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே