Tiruppur | Sony | திருப்பூர் சோனி ஷோரூமை திறந்து வைத்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாகிகள் #Tiruppur #Sony திருப்பூர் பல்லடம் சாலையில் புதிய சோனி சோரூமை பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ் மற்றும் சோனி நிறுவன நிர்வாகிகள் இணைந்து திறந்து வைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மெயின் ரோடு வித்யாலயம் பேருந்து நிறுத்தம் அருகே, புதிய சோனி சோரூம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்ஸஸ் மற்றும் சோனி நிறுவன நிர்வாகிகள் இணைந்து ரிப்பன் வெட்டி இந்த புதிய ஷோரூமை திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக சோனி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரும், தேசிய விற்பனைத் தலைவருமான சதீஷ் பத்மநாபன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த புதிய ஷோரூமில் சோனி நிறுவனத்தின் டிவிக்கள், ஹோம் தியேட்டர்கள், சவுண்ட்பார்கள் உள்ளிட்ட பல்வேறு அக்சஸரீஸ்கள் இடம்பெற்றுள்ளன.