தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் - 300 பேர் கைது

திருப்பூரில் தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும் இச்சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை