தமிழ்நாடு

வயதான தாயை வீதியில் விட்டுச் சென்ற பிள்ளைகள் : 4 பிள்ளைகள் இருந்தும் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்

திருப்பூர் அருகே வயதான தாயை பெற்ற பிள்ளைகளே நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் அருகே வயதான தாயை பெற்ற பிள்ளைகளே நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் வயதான பெண் ஒருவர் உடைகள் கிழிந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் இருப்பதை பார்த்த தன்னார்வ அமைப்பினர், அவருக்கு போதிய உணவு, உடை கொடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைகளுக்கு பிறகு அவரிடம் விசாரித்த போது தன் பெயர் பத்மாவதி என தெரிவித்துள்ளார். ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ள நிலையில் அவர்கள் தன்னை காரில் அழைத்து வந்து ரோட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். ஆனால் தன் ஆசையெல்லாம் இறுதிக்காலத்தில் தன் மகனுடன் இருக்க வேண்டும் என விரும்பியுள்ளார். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பத்மாவதியின் மகன் மற்றும் மகள்களிடம் தொடர்பு கொண்ட போது, தங்களின் தாய் தங்களுக்காக சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை என்றும், அதனால் அவரை பராமரிக்க தயாராக இல்லை என அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனமே பத்மாவதியை பராமரிக்க முன்வந்த போதிலும், அவரின் நினைவெல்லாம் தன் பிள்ளைகளை பற்றியே இருக்கிறதாம். மருத்துவமனையில் இருந்தாலும் பிள்ளைகளின் பெயர்களை சொல்லி சொல்லி மனதுக்குள் வெம்பிக் கொண்டிருக்கிறார் அந்த தாய்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்