தமிழ்நாடு

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுர பணிகளை நிறுத்த வேண்டும் : திருப்பூர் குமரன் சிலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய நிலங்களில், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
விவசாய நிலங்களில், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்தும், நிலங்களை கையகப்படுத்த காவல்துறை, வருவாய் துறையினரை வைத்து விவசாயிகளை மிரட்டும் போக்கை கைவிட கோரியும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரை உயர்மின் கோபுர பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் முழுக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Omni Bus | ``சிறைபிடிப்பு’’ - அடாவடி ஆம்னி பேருந்துகளுக்கு இடியை இறக்கிய அரசு

``தவெக அரசு மீது அதிருப்தி’’ - ஓரே அடியாக அடித்த கம்யூனிஸ்டுகள்.. தவெக பக்கமிருந்து வந்த விளக்கம்

NTK Seeman Support | ``ஆதரவு’’ - அரசியல் களத்தை புரட்டிப்போட்ட சீமான்

CPM Shanmugam ``இது துரோகம்.. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடக்கூடாது?’’

Byelection | 4 கட்சியையும் எதிர்த்து `கம்யூ.,’ நிறுத்திய வேட்பாளர்கள்.. அவர்களின் `மாஸ் பின்னணி’