உடுமலையில், வனத்துறை அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுப்பன்றிகளை விரட்டி அடித்தால் வனஅதிகாரிகள் அபராதம் விதிப்பதாக கூறும் விவசாயிகள், அரசு உடனடி தீர்வு காணவில்லையெனில் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்தனர்.