தமிழ்நாடு

வங்கியில், உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை - வங்கி ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை

திருப்பூரில் வங்கி உதவியாளர் ஒருவர், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் அவினாசி கனரா வங்கி கிளையில் உதவியாளராக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வங்கி மேலாளர் கலைச்செல்வி, வங்கியில் வாடிக்கையாளரின் பணம் அறுபதாயிரம் ரூபாயை கணேசன் திருடி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தம்மிடம் சிசிடிவி ஆதாரங்கள் இருப்பதாக கூறி, போலீஸில் புகார் அளிக்க உள்ளதாகவும் கலைச்செல்வி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலரிடம் கூறி, கணேசன் வருத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், வங்கியில் உள்ள உணவு உண்ணும் அறையில் திடீரென கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு