தமிழ்நாடு

"ரூ.1,000 இருந்தால் போதும்.. வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம்" - இப்படியும் நடக்கும்.. உஷார் மக்களே

தந்தி டிவி

திருப்பத்தூர் அருகே, ஆயிரம் ரூபாய் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் தரப்படும் எனக் கூறி, நூதன மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் - சித்ராதேவி தம்பதி, தனியார் வங்கியில் இருந்து வருவதாகக் கூறி, திருப்பத்தூர் அருகே கள்ளிப்பட்டு பகுதியில் உள்ள மக்களிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். லோன் தேவைப்படுபவர்கள், ஆயிரம் ரூபாய் செயலாக்கக் கட்டணம் செலுத்தினால், ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். அதன்படி, 70 பேரிடம் அந்த தம்பதி பணம் வசூலித்த நிலையில், சந்தேகமடைந்த சிலர், சம்பந்தப்பட்ட தனியார் வங்கிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, அங்கு வந்த தனியார் வங்கி மேலாளர், அவர்களது அடையாள அட்டையை சோதனை செய்தபோது, போலி என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கணவன், மனைவி இருவரையும் பிடித்து, பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்