தமிழ்நாடு

Tirupathur | கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன்...வீடு புகுந்து கள்ளக்காதலன் வெறிச்செயல்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை, கள்ளக்காதலன் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமர் நகர் பகுதியை சேர்ந்த அப்புன்ராஜ் - ஜீவா தம்பதியருக்கு மகள் மற்றும் மகன் என இருகுழந்தைகள் உள்ளனர். ஜீவா, பிரேம்குமார் என்ற இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்புன்ராஜ், பிரேம்குமாரை கண்டித்துள்ளார். இதையடுத்து ஜீவா, பிரேம்குமார் உடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், நள்ளிரவில் வீடு புகுந்து அப்புன்ராஜை, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்புன்ராஜ், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தப்பி ஓடிய பிரேம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்