தமிழ்நாடு

பிரபல ரவுடியை மடக்கி பிடித்த போலீசார் - நீராவி முருகன் மீது வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி நீராவி முருகன் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில், போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், வள்ளியூர் அக்கசாலை அருகே ஒரு வீட்டில் தங்கியிருந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது, நீராவி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் காரில் தப்ப முன்றபோது, காரின் டயர் கழிவு நீர் கால்வாய்க்குள் சிக்கியது. இதயடுத்து, முருகனை ஆய்வாளர் தேவேந்திரன் நெருங்க முயன்ற போது, அவரை முருகன் அரிவாளால் தாக்கியுள்ளார். உடனே, தேவேந்திரன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, முருகன் மற்றும் அவரது ஓட்டுநரை வளைத்து பிடித்தனர். உடன் இருந்தவர்கள் தப்பியோடிய நிலையில், நீராவி முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்