நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பொறியியல் படிக்கும் மகனை, தந்தையே வெட்டிக் கொன்றது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீலாத்திக்குளம் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மது பழக்கத்திற்கு அடிமையான முத்து என்பவர், தனது மகன் வேல்முருகனை அடித்துக் கொன்றுள்ளார். செல்போன் இணைப்பு கிடைக்காததாலும், 3 நாட்களாக கல்லூரிக்கு வராததாலும், சந்தேகமடைந்த வேல்முருகனின் நண்பர்கள், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது, இந்த கொலை சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனின் நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ராதாபுரம் போலீசார், முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.