மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பராமரிப்பு பணி காரணமாக சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை விதித்திருந்த நிலையில், தற்போது கூடுதல் தண்ணீர் வரத்து காரணமாக மணிமுத்தாறு அணை பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.