தமிழ்நாடு

வன காவலர் பணிக்கு மலைவாழ் பெண்கள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஷில்பா வாழ்த்து

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், வனத்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர். வனத்துறையில் காலியாக இருந்த 527 வனகாவலர் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் மலை வாழ் மக்களுக்கு 99 இடம் ஒதுக்கப்பட்டது. இதற்காக, பாபநாசம் மலைப்பகுதிகளில் வசித்து வரும் படித்த இளைஞர்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகம் பயிற்சி வழங்கியது. இதில் 6 பேர் வெற்றிபெற்று நேர்முகத்தேர்வு வரை சென்ற நிலையில், 2 பெண்கள் வனக்காவலர் பணிக்கு தேர்வாகி பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் வன சரக பகுதியில், அவர்களுக்கு பணிநியமனம் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசை நேரில சந்தித்து, இந்த பெண்கள் வாழ்த்து பெற்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்