நெல்லையைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியின் மகனான 77 வயது முதியவர் சுடலைமணி. இவரின் நான்கு பிள்ளைகள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரித்து கொண்டு, தந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டதாக, ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மனு அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம், நான்கு பிள்ளைகளும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மாதம் மாதம் பணம் வழங்க தவறும் பட்சத்தில் சிறைக்கு செல்ல நேரிடும் என முதியவரின் பிள்ளைகளை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.