தமிழ்நாடு

விவசாயி வெட்டி படுகொலை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

நெல்லையில் விவசாயியை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சேகர்.இவர் நேற்று இரவு வாழை பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு சென்றுள்ளார்.வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது மகன் ரவீந்தர் அவரை தேடி தோட்டத்திற்குள் சென்றுள்ளார். அப்போது சேகர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு மகன் ரவீந்தர் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக சேகர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்