தமிழ்நாடு

பல இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் : திருட சென்றபோது சிக்கி கொண்ட கொள்ளையர்கள்

ஒரு வீட்டில் நகை பணம் மற்றும் ஆடம்பர பொருட்களை திருடிய ஒரு கும்பல், அதை எடுத்துசெல்ல மற்றொரு வீட்டில் காரை திருடி சென்ற சம்பவம் திருவெறும்பூர் அருகே அரங்கேறியுள்ளது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கோகுல்நகரை சேர்ந்த தர்மேந்திரன், கொல்கத்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவர், விடுமுறைக்காக, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கடந்த 3 ஆம் தேதி இரவு, மாயமானது. இது குறித்து தர்மேந்திரன், திருவெறும்பூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தர்மேந்திரன் வீட்டிற்கு அருகே உள்ள தியாகராஜன் வீட்டில் அதே தினத்தன்று மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், 2 எல்.இ.டி. டிவி, ஹோம் தியேட்டர், அரை கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். தியாகராஜனும் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலையில் காரில் வந்த 3 மர்ம நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். கார்த்திக், தமிழ்செல்வன், ஆனந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து, தியாகராஜன் வீட்டில் நகை, பொருட்களை திருடிவிட்டு, அதை எடுத்துசெல்வதற்காக, தர்மேந்திரன் காரை திருடியது விசாரணையில் தெரியவந்தது.புதுக்கோட்டை , ஆதனக்கோட்டை, கள்ளக்குறிச்சி என பல இடங்களில் திருடி வந்த இந்த மூவரும்,தற்போதுகூட,திருடுவதற்காகசெல்லும்போதே போலீசாரிடம் பிடிபட்டனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு