தமிழ்நாடு

சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீர் - நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல்

தனியார் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருச்செந்தூர் கோவில் மற்றும் பேருந்து நிலையம் அருகே விடப்படுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தந்தி டிவி

திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதி பெறாத தனியார் விடுதிகள் இயங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தனியார் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் சாலையில் விடப்படுவதாக கூறபடுகிறது. அதேபோல் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் கழிவுநீர் விடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சாலைகளில் கழிவுநீரை வெளியேற்றும் தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்