திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு செய்தனர். பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட மருத்துவமனைகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆயிரத்து நூறு மருத்துவர்கள் விரைவில் பணியில் சேருவர் என்றும், இரண்டாயிரத்து 345 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, விரைவில் பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.