திருக்கோவிலூர் தாலூகா கூவனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞர் பலரையும் இதுபோன்று ஏமாற்றி 23 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து, மணிகண்டன் இந்த மோசடியை அரங்கேற்றி வந்துள்ளார்.