தமிழ்நாடு

திண்டிவனத்தில் கன மழை பெய்ததால் ரயில்கள் தாமதம்

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

தந்தி டிவி
திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இடி மின்னல் தாக்கியதில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் உள்ள சிக்னல் பழுதடைந்தது. பச்சை சிக்னல் செயல்படவில்லை. இதனால் அதிவிரைவு ரெயில்கள் திண்டிவனத்திற்கு முன்பு பாஞ்சாலம் மற்றும் ஒலக்கூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். நெல்லை அதிவிரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல அனந்தபுரி, மன்னை, பாண்டியன், காரைக்கால், சேலம், உழவன், மங்களூர் , ராக் போர்ட் ஆகிய ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக திண்டிவனம் ரயில் நிலையத்தை கடந்து சென்றன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்