விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அருங்குணம் கல்குவாரியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அந்தரத்தில் தொங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குவாரியில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் லாரி அந்தரத்தில் தொங்குவதை பார்த்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி லாரி மற்றும் ஓட்டுநர் ரகுமானை பத்திரமாக மீட்டனர்.