தமிழ்நாடு

டிக் டாக் பிரபலம் திவ்யா கைது

அவதூறாக பேசியதாக டிக் டாக் பிரபலம் திவ்யாவை தேனி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

தேனி மாவட்டம் தஞ்சாவூரை சேர்ந்தவர் திவ்யா. டிக் டாக் பிரபலமான இவர்,

தனியாக யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திவ்யா மீது ஏற்கனவே புகார்கள் அதிகம் எழுந்தன. இதனிடையே நாகலாபுரத்தை சேர்ந்த டிக் டாக் பிரபலமான பெண் ஒருவரை அவதூறாக பேசியதாக திவ்யா மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் தேனி சைபர் க்ரைம் போலீசார் திவ்யாவை தேடி வந்தனர். தலைமறைவான திவ்யா, நாகூரில் இருந்தது உறுதியான நிலையில் அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திவ்யா, நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே திருநங்கைகள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்