தமிழ்நாடு

விஷத்தால் அடுத்தடுத்து 2 புலிகள் உயிரிழப்பு....

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் விஷம் கலந்த மாமிசத்தை சாப்பிட்டு அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்துள்ளது.

முக்கட்டி கிராமப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு புலி வாயில் ரத்தம் கசிந்தவாறு இறந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அப்பகுதியை சுற்றி ஆய்வு நடத்தினர். அப்போது மற்றொரு புலியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இரண்டு புலிகளையும் ஒன்றாக வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த புலிகளின் வயிற்றில் மாமிசம் இருந்தது, தெரியவந்தது. பிறகு புலிகளின் கால்தடத்தை பின் தொடர்ந்ததில் அதே தனியார் தேயிலை தோட்டத்தில் காட்டுப்பன்றி ஒன்று இறந்துகிடந்தது. காட்டுப்பன்றியை ஆய்வு செய்ததில், அதன் உடம்பில் விஷம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தனிக்குழு அமைத்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்