காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளிப்புற நோயாளிகளகவும்,100-க்கும் அதிகமானோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் ரூபன், ஜெகன், செஞ்சைய்யாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால், சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.