NLC | Neyveli | ஆயிர கணக்கானோர் பணிநீக்கம்.. கொதிப்பில் தொழிலாளர்கள்.. NLCஐ சுற்றி.. போராட்டம் #Cuddalore #NLC #Neyveli கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கம்-2 வாயில் முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுரங்கம்-1, சுரங்கம்-2, சுரங்கம்-1ஏ ஆகியவற்றில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்ததால் பணி நீக்கம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.